Home /News /tamil-nadu /

கூகுள் பே கொள்ளையர்கள்.. ஆவடியில் லிப்ட் கேட்பது போல் இளைஞரை தாக்கி கைவரிசை

கூகுள் பே கொள்ளையர்கள்.. ஆவடியில் லிப்ட் கேட்பது போல் இளைஞரை தாக்கி கைவரிசை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஆவடியில் இளைஞர் மறித்த கும்பல் கூகுள் பே ஆஃப் மூலம் 13000 பணத்தை தங்களது அக்கவுண்டுக்கு மாற்றிக்கொண்டு இளைஞரை தாக்கிவிட்டு சென்றுள்ளனர்.

    சென்னையில் இளைஞரை தாக்கிய கும்பல் அவரது கூகுள் பே மூலம் பணத்தை பறித்த சம்பவம் நடந்துள்ளது.

    சென்னை ஆவடி பகுதியில் ஒரு கும்பல் லிப்ட் கேட்பது போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அவரது செல்போனை பிடுங்கி கூகுள் பே ஆப் மூலம் வங்கி கணக்கில் இருந்த  பணத்தை தங்களது அக்கவுண்டுக்கு அனுப்பியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 24). இவர் ஆவடியை அடுத்த சோலைச்சேரி பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார். நண்பரை பார்த்து பேசிவிட்டு ஆவடியை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். அப்போது சாலையில் ஒரு டிப் டாப் ஆசாமி ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். ஷேர் ஆட்டோ எதுவும் வரவில்லை எனக் கூறி லிப்ட் கேட்டுள்ளார்.

    Also Read:  கனவில் வந்து மிரட்டிய பேய்.. காவலர் தூக்கிட்டு தற்கொலை - நடந்தது என்ன?

    அஜித்குமார் அந்த நபரை ஏற்றிக்கொண்டு சில கிலோமீட்டர் வந்துள்ளார். அப்போது சாலையில் இரண்டு இளைஞர்கள் வழிமறித்துள்ளனர். வண்டியை நிறுத்தியதும் திடீரென இருவர் வந்து சூழ்ந்துக்கொண்டனர்.  லிப்ட் கேட்டு வந்த நபர் உட்பட மூவரும் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கத்தொடங்கினர். இளைஞர் அணிந்திருந்த மோதிரம் மற்றும் ஒரு பவுன் மதிப்பிலான தங்க செயினை பறித்துக்கொண்டனர். இளைஞரிடம் மேற்கொண்டு எதுவும் இல்லாததால் அவரது செல்போனை பறித்த கும்பல் கூகுள் பே ஆஃப் மூலம் தங்களது அக்கவுண்டுக்கு பணம் அனுப்புமாறு மிரட்டியுள்ளனர். அவரும் பயத்தில் கூகுள் பே பாஸ்வேர்டை கூற அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.13000 தங்களது வங்கி கணக்கு மாற்றிக்கொண்டனர்.

    Also Read: கோவை மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய 48 யூடியூப் சேனல்கள்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

    இளைஞரை மூவரும் சேர்ந்து தாக்கி அங்கிருந்த முட்புதரில் தள்ளிவிட்டு அவரிடம் இருந்த மொபைல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தையும்   பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். ஒரு வழியாக அந்த இளைஞர் அங்கிருந்து ஆவடி போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞரின் கூகுள் பே மூலம் எந்த அக்கவுண்டுக்கு சென்றது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் பணத்தை அனுப்பிய வங்கி கணக்கு விபரத்தை வைத்து விசாரணை நடந்து வருகிறது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Google pay, Mobile phone, Money, Robbery, Youths

    அடுத்த செய்தி