Home /News /tamil-nadu /

ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை - ஒரே மாதத்தில் பெயர்த்தெடுப்பு.. பொதுமக்கள் அதிருப்தி

ரூ.25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை - ஒரே மாதத்தில் பெயர்த்தெடுப்பு.. பொதுமக்கள் அதிருப்தி

nungambakkam

nungambakkam

Nungambakkam: புதிதாக சாலைகள் அமைக்கும் போது ஏற்கனவே உள்ள சாலையை அகற்றி விட்டு புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு மாறாக வீரபத்ரன் தெருவில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு கான்கிரீட் போட்டு சாலையின் உயரம் உயர்த்தப்பட்டிருந்தது.

மேலும் படிக்கவும் ...
    சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை ஒரு மாதத்திற்குள் பெயர்த்து  வந்துள்ளது. புழுதி பறந்த கான்கிரீட் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

     

    சென்னையில் மழையால் சேதமடைந்த சாலைகள், குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் என சுமார் 8 ஆயிரம் சாலைகளை சீரமைக்கும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் வீரபத்ரன் தெருவில் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது.

    புதிதாக சாலைகள் அமைக்கும் போது ஏற்கனவே உள்ள சாலையை அகற்றி விட்டு புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு மாறாக வீரபத்ரன் தெருவில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு கான்கிரீட் போட்டு சாலையின் உயரம் உயர்த்தப்பட்டிருந்தது. மழை காலங்களில் வீரபத்ரன் தெருவில் மழைநீர் தேங்குவதன் காரணமாக சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சாலை அமைக்கப்படதாகவும் மாநகராட்சி தெரிவித்திருந்தது.

    Also read: தங்கத்தின் விலை எப்போது குறையும்? எப்போது அதிகரிக்கும்? விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது..

    ஆனால் சாலையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் மழை நீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் போடப்பட்ட சாலை தரமற்று இருப்பதாகவும், குடியிருப்பு பகுதிகளுக்குள் சிமெண்ட் கழிவு, புழுதி நுழைவதால் மூச்சு விடுவதில் சிரமங்களை சந்திப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அடுக்கடுக்கான புகார்களால் சாலை அமைத்து முழுமையாக ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில் 320 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட புதிய சாலையை சென்னை மாநகராட்சி பெயர்த்து எடுத்தது.

     

    இந்த நிலையில், தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரரிடம் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாலைகள் அமைத்து அதை அவசர அவசரமாக அகற்றுவதற்கு மாறாக சாலை அமைக்கும் போதே விதிகளை மீறாமல் தரமாக அமைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

     
    Published by:Arun
    First published:

    Tags: Nungambakkam

    அடுத்த செய்தி