Home /News /tamil-nadu /

தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியா? எதேச்சையாக நடந்ததா? போலீசார் விசாரணை.

தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியா? எதேச்சையாக நடந்ததா? போலீசார் விசாரணை.

செந்தில் - பைரவி தம்பதி

செந்தில் - பைரவி தம்பதி

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சென்னை அடையாறு எல்.பி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் பிரபல தோல் சிகிச்சை பெண் மருத்துவரான பைரவி. சென்னை போயஸ் தோட்டத்தில் மருத்துவமனை வைத்து நடத்தி வரும் பைரவி சில மாதங்களுக்கு முன்பு நடிகை ரைசா முகம் வீங்கி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் இவரது தவறான சிகிச்சை தான் காரணம் என நடிகை ரைசாவால் குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கியவர்.

இவரது கணவர் தொழிலதிபர் செந்திலுடன் (வயது 49) வசித்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவர் பைரவி வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாஸ்திரிநகர் போலீசார் மருத்துவர் பைரவியின் வீட்டில் பார்த்தபோது பைரவியின் கணவர் தொழிலதிபர் செந்தில் தோள்பட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

துப்பாக்கி


உடனடியாக அவரை மீட்டு ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இடது பக்க தோள்பட்டையில் குண்டு பாய்ந்து தற்போது சிகிச்சை பெற்று வரும் தொழிலதிபர் செந்திலின் உயிருக்கு ஆபத்தில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் அதுவும் குண்டுகளுடன் லோடில் இருந்த துப்பாக்கியை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என சந்தேகம் ஏற்படவே தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செந்தில் விளக்கம்:

இந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செந்தில் நம்முடன் பேசிய போது, துப்பாக்கியை சுத்தப்படுத்திக் கொண்டுந்தபோது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்துவிட்டதாக தெரிவித்தார்.

மனைவியும் மருத்துவருமான பைரவிக்கு நேற்று முன்தினம் தான் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Ramprasath H
First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Gun fire, Husband Wife, Police case, Suicide attempt

அடுத்த செய்தி