• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதல்வன் பட பாணியில் அசத்தும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

முதல்வன் பட பாணியில் அசத்தும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

முதல்வன் பட பாணியில் அசத்தும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

முதல்வன் பட பாணியில் அசத்தும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பொது மக்களின் குறைகளை தெரிவிக்க ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக பொதுமக்கள் கூடும் இருபத்தி ஐந்து இடங்களில் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டிகளில் கிடைக்கப்பெறும் ஆலோசனைகளை மருத்துவமனை நிர்வாகம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்கிறது.

பெட்டிகள் வைக்கப்பட்ட முதல் வாரத்திலேயே நோயாளி ஒருவர் சுடுதண்ணீர் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக குறிப்பிட்டதை கவனித்து மருத்துவமனை வளாகத்தில் 90 இடங்களில் சுடு தண்ணீர் கிடைக்க கீசர் வைக்கப்பட உள்ளது.

இது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறுகையில், "ஒரு முறை நோயாளி ஒருவரிடம் குறைகள் குறித்த கேட்டபோது சிலவற்றை கூறினார். ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் என்னிடம் வந்து நான் தவறாக கூறி விட்டேன் என்றார். புகார் தெரிவித்தால் சிகிச்சை நல்ல முறையில் கிடைக்காதோ என்ற பயம் உள்ளது. எனவே தான் ஆலோசனைப் பெட்டிகளின் தேவை உணர்ந்து அவற்றை 25 இடங்களில் வைத்துள்ளோம்.

இதில் நோயாளிகள் உடன் வருபவர்கள் தங்கள் புகார்களை, கருத்துகளை, ஆலோசனைகளை, பாராட்டுக்களை தெரிவிக்கலாம். கொடுக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது நோயாளி ஒருவர் சுடு தண்ணீர் வெளியே சென்று வாங்க வேண்டியுள்ளது என்றார். எனவே 90 இடங்களில் கீசர் பொருத்jதி உள்ளோம். காலை 5 மணி  முதல் 7 மணி வரை சுடு தண்ணீர் எல்லா வார்டுகளிலும் கிடைக்கும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: