• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் சதமடித்தது தக்காளி.. கிடுகிடு விலை உயர்வு - கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.120க்கு விற்பனை 

சென்னையில் சதமடித்தது தக்காளி.. கிடுகிடு விலை உயர்வு - கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ ரூ.120க்கு விற்பனை 

தக்காளி

தக்காளி

சென்னையில் தக்காளி கிலோ 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

  • Share this:
    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் வீடுகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வெள்ள நீரை மோட்டர் மூலம் அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அத்தியாவசிய உணவுப்பொருளான தக்காளி விலை சென்னையில் 100 ரூபாயை எட்டியுள்ளது.  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி மொத்த விற்பனை கிலோ ரூபாய் 120 க்கும் வெளிச்சந்தையில் 150 க்கும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.  தொடர் கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைவால் தக்காளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

    Also Read: ChennaiRains: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. மூன்று சுரங்கப்பாதைகள் மூடல்

    தீபாவளி நேரத்தில் கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி தற்போது 120 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தக்காளி மட்டுமல்லாமல் மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது. காய்கறிகளின் வரத்து குறைந்தால் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: