• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது..

தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது..

மேட்லி சுரங்கப்பாதை

மேட்லி சுரங்கப்பாதை

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால், மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமே நீரில் மூழ்கி குளம் போல காட்சியளிக்கிறது.

  • Share this:
    சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், மேட்லி சுரங்கப்பாதை மீண்டும் குளம்போல மாறியுள்ளது.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சென்னையில் இடைவெளியில்லாமல் தொடர் மழை பெய்து வருகிறது. நகரின் மையப்பகுதிகளான வடபழனி, கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    சென்னை தியாகராய நகர் மேட்லி சுரங்கப்பாதையில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் மேட்லி சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. அதன்பின்னர் மழைநீர் அகற்றப்பட்ட நிலையில், நேற்று போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

     



    இந்தநிலையில் இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால், மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமே நீரில் மூழ்கி குளம் போல காட்சியளிக்கிறது.தி.நகர் மேட்லி சுரங்கப்பாதையில் இருந்து தண்ணீர் வெள்ளம்போல் ஆர்ப்பரித்து தி .நகர் பேருந்து நிலையத்திற்கும், அருகாமையில் உள்ள மற்ற சாலைக்கும் செல்கிறது. தி.நகர் பசுல்லா சாலை, ஜிஎன் செட்டிசாலை முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: