• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குட்டித் தீவாக மாறிய தி.நகர்..மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியது

குட்டித் தீவாக மாறிய தி.நகர்..மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியது

மேட்லி சுரங்கப்பாதை

மேட்லி சுரங்கப்பாதை

தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது.

  • Share this:
    சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

    சென்னையில் இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மழை நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு சுரங்கப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மோட்டார் மூலம் நீரை வெளியேற்றிய பின் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

    சென்னை தியாகராய நகரில் உள்ள மேட்லி சுரங்கப்பாதை முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்ற போதும், தொடர் மழையால் அங்கு கிட்டத்தட்ட 30 அடி அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக தி.நகர் குட்டித்தீவு போல் மாறியுள்ளது.

     



    சென்னையில் ஆறு சுரங்கப்பாதைகள் மழை காரணமாக மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கியுள்ளன.



    இதையடுத்து கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை ஆகிய ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: