ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்களுக்கு வழங்கும் உணவை ருசி பார்த்த முதல்வர் ஸ்டாலின்

மக்களுக்கு வழங்கும் உணவை ருசி பார்த்த முதல்வர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் முகாம்களை பார்வையிட்ட முதலமைச்சர் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு பார்த்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மூன்றாவது நாளாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறை சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஒவ்வொரு வேளையும் சுமார் ஒன்றரை லட்சம் நபர்களுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் மூன்றாவது நாளாக நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

' isDesktop="true" id="609189" youtubeid="z4GaQ9wfKjc" category="chennai-district">

வடசென்னை பகுதிகளான புளியந்தோப்பு, வேப்பேரி, பெரம்பூர் கொளத்தூர் வில்லிவாக்கம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். போரூர் , கொளத்தூர் முகாம்களை பார்வையிட்ட முதலமைச்சர் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு பார்த்தார். போரூர் அம்மா உணவகத்திலும் உணவின் தரத்தை சோதித்து பார்த்தார். இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தான் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் ஆய்வின் போது மக்களுக்கு உணவும் நிவாரணப்பொருள்களும் வழங்கினார்.

First published:

Tags: Chennai flood, Chennai Rain, DMK, Flood alert, Flood warning, Food