• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செம்பரம்பாக்கம் ஏரியில் 2000 கன அடி நீர் வெளியேற்றம்.. அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் 2000 கன அடி நீர் வெளியேற்றம்.. அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் தொடர்ந்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

  • Share this:
     

    மழை பெய்து வருவதால்  செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2,000 கன அடி நீர் வெளியேற்றுவது தொடர்கிறது.

    தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்  பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.சென்னையில் தொடர்ந்து வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. தற்போது  பல்வேறு பகுதிகளில் இருந்து நீர் வந்து கொண்டிருப்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று மாலை 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தற்போது தொடர்ந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி நீர் மட்ட உயரம்  21.33 அடியாகவும், நீர் வரத்து  710 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் :2000 கன அடியாக உள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது குறைந்தாலும் தொடர்ந்து மழை இருக்கும் என்ற காரணத்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் தொடர்ந்து நீர் வெளியேற்றுவது 2 ஆயிரம் கன அடியாக வைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் தொடர்ந்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏனென்றால் தற்போது பெய்து வரும் கனமழையாலும், பின்பு தொடங்கவிருக்கும் வடகிழக்கு பருவ மழையாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரும் என்பதால் 21 அடியில் ஏரியை கண்காணிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் ஆதாரமாக உள்ள ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைபாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் சூழல் இருப்பதால் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர்: சோமசுந்தரம் 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: