செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 3000 கன அடி நீர் திறந்துவிட பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகள் பூண்டி ஏரி, புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, வீராணம் ஏரி ஆகியவை . இதில் முக்கியமான ஏரியாக பார்க்கப்படுவது சென்னையில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகமானதால் 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு. கரையோர வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டத்தை 21 அடியில் தொடர்ந்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 5440 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது
ஏரியில் இருந்து உபரி நீர் 2,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ள நிலையில் திறக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்க பொதுப்பணித் துறையினர் முடிவு செய்துள்ளனர். ஏரியில் இருந்து 3000 கன அடியாக திறந்துவிட உள்ளனர். நீர் வரத்தைப் பொறுத்து மேலும் உபரி நீர் திறப்பு அதிகரிக்கக்கூடும் என பொதுப்பணித் துறையினர் கூறுகின்றனர். அடையாற்றின் கரையோரம் தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்க பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.