Home /News /tamil-nadu /

மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளம்.. சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்

மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளம்.. சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்

File image

File image

சென்னை வெள்ளக்காடாக மாறி பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கின்றது காலையில் மழை ஓய்ந்து இருக்கும் நிலையில் தெருக்களில் மற்றும் சாலைகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது. 

    சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் நேற்று பிற்பகல் முதல் இரவு வரை கொட்டி தீர்த்த கன மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வடியாமல் உள்ளது. பல இடங்களில் மாநகராட்சி சார்பில் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகின்றது. கடந்த நவம்பர் மாதம் வட கிழக்கு பருவமழையின் போது பலத்த மழையால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது பல நாட்கள் இடைவிடாத மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் வடியாமல் இருந்தது இதையடுத்து டிசம்பர் மாதத்தில் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று பிற்பகலில் தொடங்கிய மழை நேற்று இரவு வரை கொட்டித் தீர்த்தது.

    இதனால் சென்னை வெள்ளக்காடாக மாறி பல இடங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்கின்றது காலையில் மழை ஓய்ந்து இருக்கும் நிலையில் தெருக்களில் மற்றும் சாலைகளில் தண்ணீர் வடியாமல் உள்ளது.  இதனை மின் மோட்டார்கள் கொண்டு வெளியேற்றும் பணியை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது மழை காரணமாக வாகனங்கள் பழுதாகி நிற்பதுடன் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது ஆனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    Also Read: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

    சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.அதன்படி, துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.  மழைநீர் தேங்கியுள்ள சுரங்கப்பாதைகளில் உள்ள நீரை பம்ப் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Chennai flood, Chennai Rain, Chennai rains, Red Alert, Weather News in Tamil

    அடுத்த செய்தி