• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெள்ளத்தில் பரிதவிக்கும் சென்னை.. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டும் மாநகராட்சி

வெள்ளத்தில் பரிதவிக்கும் சென்னை.. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டும் மாநகராட்சி

சென்னை

சென்னை

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு தேவைப்பட்டால் ஹெலிகாப்டரை களமிறக்கவும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மாநகராட்சி சார்பில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கிய 16 சுரங்கப்பாதைகளில் 14ல் முழுமையாக நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தாழ்வான தெருக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி சார்பில் அலுவலர்கள், பணியாளர்கள் என மொத்தம் 23 ஆயிரம் நபர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ள நிலையில், திங்கட்கிழமை காலை நிலவரப்படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 889 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.அவர்களுக்கு உணவு வழங்குவதற்கான அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளன.

    Also Read: வெள்ளத்தில் மிதக்கும் வடசென்னை.. வீட்டை காலி செய்து இடம்பெயரும் மக்கள்

    அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறை சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஒவ்வொரு வேளையும் சுமார் ஒன்றரை லட்சம் நபர்களுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

     



    மேலும், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கு தேவைப்பட்டால் ஹெலிகாப்டரை களமிறக்கவும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

     



    சென்னை மாநகர பகுதிகளில் பருவமழை காலத்தில் நோய் பரவுவதை தடுக்கும் விதமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 200 முகாம்கள் அமைக்கப்பட்டு 3 ஆயிரத்து 776 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையினால் விழுந்த 38 மரங்களும் அகற்றப்பட்டன. தண்ணீர் தேங்கிய 16 சுரங்கப்பாதைகளில் 14ல் முழுமையாக தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: