Home /News /tamil-nadu /

ஸ்மார்ட் சிட்டியில் வேலுமணி கமிஷன் தான் தெரியுது.. ஆக்‌ஷன் உறுதி.. ஸ்டாலின் எச்சரிக்கை

ஸ்மார்ட் சிட்டியில் வேலுமணி கமிஷன் தான் தெரியுது.. ஆக்‌ஷன் உறுதி.. ஸ்டாலின் எச்சரிக்கை

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை விரைவில் விசாரணை நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மூன்றாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் உள்ள சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய பின்னர் கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருக்க கூடிய மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்றார்.

    முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை என்றார்.மேலும், இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விசாரணை நடத்தப்படும். வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

    மேலும், வேலுமணி கமிஷன் பெற்றுள்ளது நன்றாக தெரிகிறது எனக்கூறிய அவர், தற்போது சமாளித்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும்,ஸ்மார்ட் சிட்டி திட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்", என்றார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: ADMK, Chennai, Chennai flood, Chennai Rain, Chennai rains, DMK, Flood alert, Flood warning, MKStalin, Smart City, SP Velumani, Tamilnadu, Weather News in Tamil

    அடுத்த செய்தி