Home /News /tamil-nadu /

மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி.. அதிர்ச்சியில் பிறந்த குழந்தை - நடந்தது என்ன?

மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி.. அதிர்ச்சியில் பிறந்த குழந்தை - நடந்தது என்ன?

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மாணவியின் தற்கொலை முயற்சிக்கு காதல் தோல்வி காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னையில் காதலனால் கர்ப்பம் அடைந்த கல்லூரி மாணவி வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது இளம்பெண் கிண்டியில் உள்ள ஓர் கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.

    கீழே விழுந்ததில் அடிப்பட்டு மாணவி ரத்த வெள்ளத்தில் கிடத்துள்ளார். மாணவியின் அருகே பிறந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது. இதனைக்கண்ட அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    Also Read: முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனை - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனைக்கு காரணம் என்ன?

    கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து மாணவியை மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

    மாணவிக்கு செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப்பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதன்காரணமாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Also Read:  கர்ப்பிணியை 6 கி.மீ டோலிகட்டி சுமந்து வந்த மக்கள் - உயிரை பணயம் வைக்கும் கர்ப்பிணிகள்

    மாணவியின் காதலன் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். காதலன் ஏமாற்றியதால் மாணவி தற்கொலை முயன்றாரா . அந்தப்பெண் கர்ப்பமாக இருந்தது பெற்றோருக்கு தெரியுமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Illegal affair, Illegal relationship, Love, Love failure, Pregnancy

    அடுத்த செய்தி