• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீர்நிலைகளில் இருந்து சாதி பெயர் நீக்கம்: வண்ண குளம் என மாற்றம்!

நீர்நிலைகளில் இருந்து சாதி பெயர் நீக்கம்: வண்ண குளம் என மாற்றம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலின்படி நீர்நிலைகளின் பெயர் வண்ண குளம் என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னையில் ஜாதியின் பெயரை தாங்கி இருந்த நீர்நிலைகளின் பெயரை பெருநகர சென்னை மாநகராட்சி மாற்றம் செய்துள்ளது.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் இரண்டு குளங்கள் அமைந்திருந்தது. இந்த குளங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை  மீளாய்வுக் கூட்டத்தில்  இந்த பெயர் மாற்றம் தொடர்பாக முதல்வர் அறிவுறுத்தினார்.  இதையடுத்து, தற்போது இரண்டு குளங்கள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

    அதன்படி,  இந்த இரண்டு குளங்களுக்கும்  முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் வண்ண குளம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க: தூய்மை பணியாளர் மட்டுமல்ல தூய்மையான பணியாளர்: 100 கிராம் தங்கத்தை ஒப்படைத்தவருக்கு தலைமை செயலாளர் இறையன்பு பாராட்டு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: