சென்னையில் ரூட்டு தல பிரச்சனை என்பது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது. இதன் விளைவு நேற்று முந்தினம் சென்னை மாநில கல்லூரி மாணவர் குமார் ரயின்முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
திருநின்றவூர் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தனியாக வந்த மாநிலக் கல்லூரி மாணவரான குமாரை பிடித்து கேலி கிண்டல் செய்து மிரட்டியதால் நேற்று முன் தினம் இரவு குமார் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்தவிவகாரம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மேலும், சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் எழும் அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ரூட்டு தல பிரச்னையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் இன்று காலை மாதாவரம் பேருந்து நிலையத்தில் பிரச்னையில் ஈடுப்பட்ட தியாகராய கல்லூரி மற்றும் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சென்னை பேருந்து நிலையங்களில் போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதேபோல கல்லூரி தொடங்கும் நேரம் மற்றும் கல்லூரி முடியும் நேரங்களில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களிடையே கோஷ்டி மோதல், ரூட்டு தல பிரச்சனை உள்ளிட்ட விவகாரங்களின் காரணமாக சென்னை காவல்துறை உயர் கல்வித்துறை செயலாளர் மற்றும் அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கல்லூரிகளில் பிரச்சினைக்குரிய மாணவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் கண்காணிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரிக்கு 3 ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல ரயில்வே போலீஸ் சார்பிலும், சென்னை வரும் புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ஒரு ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்(RPF) மற்றும் ரயில்வே போலீஸ்(GRP) பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
Also Read: 15 வயது சிறுவனுடன் ஆசிரியைக்கு மலர்ந்த காதல்.. போக்ஸோ சட்டத்தில் கைது
கும்முடிபூண்டி - சென்ட்ரல், அரக்கோணம் - சென்ட்ரல், செங்கல்பட்டு - சென்ட்ரல் ஆகிய மார்க்கத்தில் செயல்படும் புறநகர் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் போலீஸ் பாதுக்காப்பு தீவிரபடுத்தபட்டுள்ளது. இதன் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய ரயில்வே டி.எஸ்.பி தலைமையில் 50 க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுக்காப்பு படையினர் மற்றும் ரயில்வே போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கோண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai local Train, Chennai Police, College student, Pachayappa's college, Route Thala