முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கள்ளச் சந்தையில் மது விற்பதற்கு லஞ்சம்: வீடியோ வெளியான நிலையில் காவலர் சஸ்பெண்ட்

கள்ளச் சந்தையில் மது விற்பதற்கு லஞ்சம்: வீடியோ வெளியான நிலையில் காவலர் சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

காவலர் குமுதநாதன் இதற்கு முன்பும் பலமுறை நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளார். எனினும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளாத நிலையில் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  • Last Updated :

சட்டவிரோதமாக மது விற்பவரிடம் லஞ்சம் வாங்கிய எழும்பூர் நுண்ணறிவு பிரிவு காவலரை சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகளை மூட சொல்லி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி கள்ளச்சந்தையில் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனை தடுப்பதற்காக சென்னை காவல் ஆணையர் தனிப்படை அமைத்து சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்களை விற்பனை செய்து வந்த நபர்களை அதிரடியாக கைது செய்ய உத்தரவிட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டத்திற்குப் புறம்பாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் நபர்கள் குறித்து நுண்ணறிவு பிரிவு காவலர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். இந்த நிலையில் எழும்பூர் காவல் நிலையத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக பணிபுரிந்து வரும் குமுதநாதன் என்பவர்  கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்களிடம் லஞ்சமாக பணத்தை வாங்கிக்கொண்டு உயரதிகாரிகளின் கவனத்திற்கு அவர்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: குளியலறையில் வெப்கேமரா வைத்து பெண்கள் குளிப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் - தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில் நுண்ணறிவு பிரிவு காவலர் குமுத நாதன் சட்டத்திற்குப் புறம்பாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் ஒரு நபரிடம் 500 ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதைத் தொடர்ந்து காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் குமதநாதன் எழும்பூர் பகுதியில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்துவரும் அரேடியன் என்கிற சண்முகம் என்பவரிடம் வாராவாரம் ரூ.500 பணம் வாங்கிக்கொண்டு அவரைப் பற்றிய தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் இருந்தது தெரியவந்தது.

மேலும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்பகுதியில் மது விற்பனை செய்யும் பல நபர்கள் குறித்து காவல் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நுண்ணறிவு பிரிவு காவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: நள்ளிரவில் கண்விழித்த பெண்.. பீரோ அருகில் நின்ற உருவம் - ஷாக்கான பெண்

தொடர் குற்றச்சாட்டு

தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள  குமுதநாதன் பட்டினப்பாக்கத்தில் நுண்ணறிவு பிரிவு காவலராக இருந்த போது இதே போல குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அப்போது துறை ரீதியான நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப்பட்டது. அதன்பிறகு எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்தபின் மதுபோதையில் பணிக்கு வந்ததாக கூறி துறை ரீதியான நடவடிக்கையும் இவர்மீது எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சட்டத்திற்குப் புறம்பாக கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யும் நபரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்ட புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Police, Police suspended