Home /News /tamil-nadu /

கணவனை இழந்த பெண்ணிடம் காதல் வார்த்தை பேசி கர்ப்பமாக்கிய காவலர்.. நீதி கேட்டு 2 வருடமாக போராடும் அவலம்

கணவனை இழந்த பெண்ணிடம் காதல் வார்த்தை பேசி கர்ப்பமாக்கிய காவலர்.. நீதி கேட்டு 2 வருடமாக போராடும் அவலம்

காவலருடன் பாதிக்கப்பட்ட பெண்

காவலருடன் பாதிக்கப்பட்ட பெண்

Police Love Affair | குற்றம்சாட்டப்பட்ட காவலர் விக்னேஷ்வரன் கடந்த 2016ம் ஆண்டு ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் ஏற்கனவே திருமணம் ஆன பெண் ஒருவரை மறுபடியும் திருமணம் செய்துகொள்வதாக கூறி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
    பேஸ்புக்கில் அறிமுகமாகிய பெண்ணை கர்பமாக்கிய காவலர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.  பாதிக்கப்பட்ட பெண் கடந்த 2 வருடமாக நீதிகேட்டு போராடும் அவலம். 

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சோபனா (வயது 28). இவருக்கு கடந்த 2014ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் இவருடைய கணவர் கடந்த 2018-ம் ஆண்டு வாகன விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவனை இழந்து 7-வயது மகளுடன் தனியே வசித்து வந்த சோபனாவிற்கு 28-வயதான விக்னேஷ்வரன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

    விக்னேஷ்வரன் M3 புழல் காவல் நிலையத்தில் காலராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு சோபனாவிற்கு பேஸ்புக்கில் அறிமுகமான காவலர் விக்னேஷ்வரன் இரண்டு ஆண்டுகளாக நண்பராக பழகி வந்த நிலையில் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி சோபனாவை காதலிப்பதாக கூறியுள்ளார்.  கடந்த 2 வருடமாக நல்ல ஒரு நண்பனாக பழகி வந்த காவலர் விக்னேஷ்வரன் காதல் உண்மை என நினைத்து அதை சோபனா ஏற்றுக்கொண்டுள்ளார்.

    Also Read: அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்.. பாதுகாப்பு கோரி பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் மனு..

    காதல் நாடகம்

    2020ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி அன்று சோபனா வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் காவலர் விக்னேஷ்வரன் சென்றுள்ளார்.  காதலிப்பதாக கூறிய அடுத்த 37 நாட்களில் சோபனா வீட்டிற்கு சென்ற காவலர் விக்னேஷ்வரன் சோபனாவை திருமணம் செய்துகொள்வதாக கூறி அவருடன் கணவன் - மனைவியாக இருந்துள்ளார். அதை தொடர்ந்து மறுபடியும் சோபனா வீட்டிற்கு சென்ற காவலர் விக்னேஷ்வரன் சோபனாவுடன் கணவன் மனைவியாக சந்தோஷமாக இருந்துள்ளார்.

    ஷோபனா - விக்னேஷ்வரன்


    இரண்டு முறை இருவரும் கணவன்-மனைவியாக இருந்த நிலையில் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி தான் கருவுற்றுள்ளதாக சோபனா காவலர் விக்னேஷ்வரனிடம் கூறியுள்ளார். சோபனா கருவுற்றதை கேட்டு அதிர்ச்சியடைந்த காவலர் விக்னேஷ்வரன் கருவை கலைக்க மாத்திரையும், கருவுற்றதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள பரிசோதனை கருவியும் வாங்கி சென்றுள்ளார்.

    Also Read: கணவனின் சித்தி மகனுடன் மனைவி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன்

    திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு கற்பமாக்கிய காவலர் விக்னேஷ்வரன் கருவை கலைக்க சொன்னதை சோபனா ஏற்காததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் விக்னேஷ்வரன் சோபனாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கூறி உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள், எங்கு வேண்டுமெனாலும், யார்கிட்ட வேண்டுமெனாலும் புகார் கொடுத்துக்கொள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியதாக சோபனா கூறினார்.

    மன உளைச்சலுக்கு ஆளான சோபனா காவலர் விக்னேஷ்வரன் தன்னை கற்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் கருவை கலைக்க சொல்வதாகவும் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  புகாரின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

    காவல் நிலையத்தில் சமரசம்

    புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்திற்கு காவலர் விக்னேஷ்வரனை வரவைத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தியதில் சோபனாவை திருமணம் செய்துகொள்வதாக போலீசார் முன்னிலையில் காலர் விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.  அதைத்தொடர்ந்து காவல் நிலையத்திலிருந்து இருவரும் சோபனா வீட்டிற்கு சென்றதும் காவலர் விக்னேஸ்வரன் ஷோபனாவை வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    Also Read: செக்ஸ் வலையில் சிக்கும் தொழிலதிபர்களை வீடியோ எடுத்து மிரட்டும் சொப்பன சுந்தரி.. பயந்து வாய் திறக்காத 'மன்மத ராசாக்கள்'! - திருச்சியை அதிரவைத்த சம்பவம்

    பின்னர் ஷோபனாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு நான் பணிக்கு செல்ல வேண்டும் என்று கிளம்பிய காவலர் விக்னேஷ்வரன் ஒரு மாதம் கழித்து எப்பயாவது ஒருமுறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவதாகவும், அவ்வப்போது அவருடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாகவும் கேட்டால் பணியின் காரணமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைப்பதாக காவலர் கூறுவதை ஏற்க மறுத்த சோபனா காவலர் விக்னேஷ்வரன் வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

    அதை தொடர்ந்து 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி புழலில் உள்ள ஒரு கோயில் அருகில் சோபனாவை நிற்கவைத்துவிட்டு அவரது அப்பா அம்மாவை வரவைத்து 4 பேரும் பேசி உள்ளனர்.ஷோபனாவை அவருடைய தாய் தந்தை ஏற்க மறுத்ததால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறி சோபனாவை மிரட்டி அங்கிருந்து அனுப்பியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
    மீண்டும் 2021ம் வருடம் நவம்பர் மாதம் 21-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

    குடும்ப பிரச்சனை என்பதால் இதை குடும்ப நலத்துறைக்கு இந்த வழக்கை மாற்றியுள்ளனர்.  எங்கும் நடவடிக்கை எடுக்காததால் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து  M3 புழல் காவல் உதவி ஆணையரை சந்தித்து அவரிடமும் புகார் அளித்துள்ளார்.

    காவலருக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸ்

    பின்னர் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். அதற்குள் தாம்பரம் காவல் ஆணையரகம் புதிதாக மாற்றியதால் இந்த புகாரை தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதா விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதா முழுக்க முழுக்க காவலர் விக்னேஷ்வரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், 10 நாட்களுக்கு மேல் அலைகழித்ததாகவும் பாதிக்கப்பட்ட தனக்கு நியாயமாக பேசவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    Also Read: செல்போன் பேச்சால் ஆத்திரம்.. திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்

    பெண்ணை ஏமாற்றியவர் காவலர் என்பதால் அவர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி ஆதரவு தெரிவித்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த இரண்டு வருடமாக தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காவலர் மீது புகார் கொடுத்தும் எங்கும் நடவடிக்கை கிடைக்காததால் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று கூடுதல் துணை ஆணையர் (ஏ.டி.சி) சண்முகம் என்பவரிடம் புகார் அளித்த அடுத்த சில நிமிடத்தில் உடனடியாக பல்வேறு பணிகளை செய்ததாகவும் பின்னர் துறை ரீதியாக ஏமாற்றிய காவலர் விக்னேஷ்வரன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    கடந்த இரண்டு வருடமாக போராடி வரும் பாதிக்கப்பட்ட சோபனா என்பவர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாக கூறிய காவல்துறையினருக்கு நன்றியும் தெரிவித்தார். திருமணமான பின்பு இருவரும் திரையரங்கு, ஹோட்டல், கோயில் என சந்தோஷமாக சுற்றித்திரிந்துள்ளனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட காவலர் விக்னேஷ்வரன் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தனியார் தொலைகாட்சியில் நடைபெற்ற சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஏற்கனவே திருமணம் ஆன பெண் ஒருவரை மறுபடியும் திருமணம் செய்துகொள்வதாக கூறி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

    சமூக வலைதளங்களில் திருமணமான பெண்களை குறிவைத்து அவர்களை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்ததாகவும் இதற்குமேல் என்னை போன்ற வேறு எந்த பெண்ணும் ஏமாறக்கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.

    செய்தியாளர் :  ப. வினோத்கண்ணன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Cheating, Chennai, Illegal affair, Love, Police

    அடுத்த செய்தி