ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் வீட்டு உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

சென்னையில் வீட்டு உரிமையாளர்களுக்கு காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!

 காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

  பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது.

  இந்நிலையில், சென்னையில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் வாடகைக்கு வசிப்போரின் விவரங்களை அக்.26ம் தேதிக்குள் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

  Also read: தமிழ்நாட்டின் இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை

  இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டை வாடகைக்கு விட்ட, 15 நாட்களுக்குள் அருகில் உள்ள காவல் நிலையங்களில், வாடகை தாரர்களின் பெயர், ஒரு புகைப்படம், அவர்களது நிரந்தர முகவரி, ஏற்கனவே வசித்த முகவரி போன்ற விவரங்களை இதற்காக உள்ள விண்ணப்ப மனுக்களில் எழுதி, காவல் நிலையங்களில் அளிக்க வேண்டும். வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க தேவையில்லை.

  வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும். வெளிமாநிலத்தவர் இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Chennai, Chennai Police