ஆந்திராவில் இருந்து கடத்திவந்து கஞ்சா விற்பனை: சென்னையில் 5 பேர் கைது!

கஞ்சா விற்றோர் கைது

பிற மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துவரும் போதிலும் கஞ்சா விற்பனை தமிழகத்தில் நடந்துகொண்டுதான் வருகிறது.

  • Share this:
ஆந்திராவிலிருந்து கடத்தி வந்து கஞ்சாவை சென்னை நீலாங்கரையில் பதுக்கி கைத்திருந்த 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை சின்ன நீலாங்கரை பகுதியில்,  தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாக நீலாங்கரை நுன்னரிவு பிரிவு போலீசாருக்கு  ரகசிய தகவல் வந்துள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து பின்னர் காவல்துறை அதிகாரி ராம்குமார் தனது தேடுதல் வேட்டையை துவங்கியுள்ளார். பின்னர் சின்ன நீலாங்கரையில் காய்கறி கடையில் வேலை செய்யும் சரவணன் என்பவர் வீட்டில் 6 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் அடையார் துணை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.  தொடர்ந்து தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணனை கைது செய்து அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை  பறிமுதல் செய்தனர்.

பின்னர் சரவணனை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததில் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த ராம்குமார்என்பவர் சரவணனுக்கு கஞ்சா கொடுத்ததாக விசாரணையில் கூறியதை தொடர்ந்து தனிப்படையினர் திருவெற்றியூர் விரைந்தனர்.

இதையும் படிங்க: பெண்ணை கொலை செய்த சப்-இன்ஸ்பெக்டர்; கொரோனாவால் உயிரிழந்ததாக நடகம்..


திருவெற்றியூரில் இருந்த ராம்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான ராம்குமாரிடம் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் ராம்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய கூட்டாளிகளான சென்னை திருவான்மியூரை சேர்ந்த ஜோசப், சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், நீலாங்கரை சேர்ந்த செந்தில் ஆகியோரை அடுத்தடுத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைதான 5 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் போலீசார்க்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீசார் என்னதான் கஞ்சா விற்பனைக்கு முட்டுக்கட்டை போட்டாலும் கஞ்சாவை தமிழகத்தில் விற்பனை செய்துதான் வருவோம் என்று போலீசார்க்கு சவால் விடும் வகையில்  பலரும் கஞ்சாவை அண்டை மாநிலங்களிலிருந்து  கடத்தி வந்த வண்ணம் உள்ளனர்.

கைதான ராம்குமார் அவருடைய கூட்டாளிகளுடன் இணைந்து ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை லாரிகள் மூலம் கடத்தி வருவது தெரியவந்தது.

ஆந்திராவிலிருந்து கோயம்பேடுக்கு காய்கறிகள் கொண்டுவரும் லாரிகளில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரிகள் மூலம் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தி வரும் கஞ்சாவை திருவெற்றியூர் பகுதிக்கு கொண்டு சென்று அங்கிருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு கஞ்சாவை மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.

கைதான 5 பேரும் மொத்த வியாபாரத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்ததும், இவர்களிடம் கஞ்சாவை வாங்குபவர்கள் பாக்கெட் போட்டு கஞ்சா புகைப்பவர்களுக்கு விற்பனை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க: மளிகை தொகுப்பு தொடர்பாக முக்கிய உத்தரவு - ரேஷன் அட்டைதாரர்கள் ஹேப்பி


பின்னர் கைதான சரவணன், ராம்குமார், ஜோசப், ஜெகதீஸ்வரன், செந்தில் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த நீலாங்கரை போலீசார் அவர்ளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 14 கிலோ கஞ்சா, 5 செல்போன், இருசக்கர வாகனம், கஞ்சா கடத்துவதற்கு பயன் படுத்திய சரக்கு ஆட்டோ, ரூபாய் 1760 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனையை ரகசிய தகவல் மூலம் கண்டறிந்த நீலாங்கரை நுன்னறிவு பிரிவு போலீசார் ராம்குமார் மற்றும் அடையார் தனிப்படை போலீசாரை அடையார் காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர்: வினோத் கண்ணன், சென்னை
Published by:Murugesh M
First published: