• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா ஊரடங்கால் ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு - சென்னை விடுதி உரிமையாளர்கள் வேதனை

கொரோனா ஊரடங்கால் ரூ.1,500 கோடி வர்த்தகம் பாதிப்பு - சென்னை விடுதி உரிமையாளர்கள் வேதனை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கொரோனா ஊரடங்குகள் தங்கும் விடுதி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  • Share this:
    கொரோனா ஊரடங்கால், 1,500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, தங்கும் விடுதிகளை நடத்தி வருவோர் வேதனை தெரிவிக்கின்றனர். வாடகை கூட கட்ட முடியாமல் தடுமாறி வருவதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில், கொரோனாவுக்கு முன்பு, சுமார் 4,000-க்கும் அதிகமான தங்கும் விடுதிகள் பரபரப்பாக இயங்கி வந்தன. ஐடி நிறுவனங்கள், கல்லூரி மாணவர்கள், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றுவோர் என பல மாவட்டங்களைச் சேர்ந்தோரும் சென்னையில் தங்கி, எளிதாக சென்று வர உதவியாக இருந்தவை இந்த தங்கும் விடுதிகள்தான். ஆனால் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும். மூடப்பட்ட இந்த தங்கும் விடுதிகள் இன்று வரை பாதிப்பில் இருந்து மீளவில்லை.

    நிலைமை இன்று சரியாகிவிடும், நாளை சரியாகிவிடும் என எதிர்பார்த்து காத்திருக்கும் விடுதி நடத்துவோருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. வங்கிகளில் வாங்கிய கடனைக்கூட செலுத்த முடியாமல், விழிபிதுங்கி நிற்பதாக விடுதி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பலர் விடுதிகளை மூடிவிட்டு சொந்த ஊருக்கே செல்லும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். கொரோனாவுக்கு பிறகு மட்டும் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் 500க்கும் மேற்பட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தங்களது நிலை மிகவும் மோசமாக உள்ளதாக வாடகை கட்டிடத்தில் விடுதி நடத்தி வருவோர் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். பாதிப்பில் இருந்து தங்களது துறை மீண்டுவர உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என விடுதி நடத்துவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 2 ஆண்டுகளாக முடங்கியுள்ள தங்களது வணிகத்தை மேம்படுத்த, மாநில அரசு உதவ வேண்டும் என்பதே விடுதி நடத்துவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: