Home /News /tamil-nadu /

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் - தாம்பரம் பகுதியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய காதலன் - தாம்பரம் பகுதியில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது

Pocso Case: பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி  காதலித்து கர்ப்பமாக்கிய நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளியில் 11,ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்ததில் அவர் 4,மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
    இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் போலீசார் அந்த தகவலை தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

    Also Read: காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

    இதனையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.அதில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 22)இவர் அதே பகுதியில் உள்ள பூ செடிகள் விற்பனை செய்து கார்டனில் வேலை செய்து வருவதும் அப்போது பள்ளிக்கு செல்லும் போது 16வயது சிறுமிடம் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. 6 மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

    Also Read:  கருங்கல்லால் அதிர்ந்த குருவாயூர் ரயில்.. பதறிய ஓட்டுநர் - வாலிபரை பிடித்து போலீஸ் விசாரணை

    இதற்கிடையில், கடந்த 5 மாதத்திற்கு முன்பு, சிறுமியை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு குன்றத்தூர் பகுதியில்  சுற்றியுள்ளான் இதில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.
    விக்னேஷை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார்  தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

    Also read:  பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் - தாம்பரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது 

    கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் மெக்கானிக் ஒருவரால் கர்ப்பமானது கண்டறியப்பட்ட நிலையில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர்: சுரேஷ்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Crime News, Pocso, POCSO case, Sexual harrasment

    அடுத்த செய்தி