வடசென்னையை கலக்கிய செயின் பறிப்பு கொள்ளையன் கைது

வடசென்னை செயின் பறிப்பு கொள்ளையன் கைது

வடசென்னை பகுதியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 • Share this:
  வடசென்னை பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த கொள்ளையனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  வடசென்னைக்கு உட்பட்ட ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ,புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக செல்போன், செயின் பறிப்பு, இரவில் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் திருடுவது என காவல்நிலையத்தில் புகார்கள் குவிந்தது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சிவபிரசாத், உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் ஆர்.கே.நகர் ஆய்வாளர் ரவி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டது.

  தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை கண்காணித்து வந்தனர். அனைத்து பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு மேற்கொண்டபோது அனைத்தும்  பகுதியிலும் ஒரே நபர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

  Also Read:  கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் சித்திரவதை செயப்பட்டு கொலை : தாய் உள்ளிட்ட 3 பேர் கைது

  போலீஸார் நடத்திய விசாரணையில் ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கில் 1 சவரன் செயின் பறிப்பு விலையுர்ந்த 2 செல்போன்கள் திருட்டு. மற்றொரு வழக்கில் ஒன்றரை சவரன் செயின்,  செல்போன் பறிப்பு மீண்டும் அதே பகுதிக்குட்பட்ட இடத்தில் அரை சவரன் ஜிமிக்கி கம்மல் கொள்ளை  அடித்த சம்பவம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தண்டையார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கு ஒன்றில் ஒரு சவரன் செயின், திருவொற்றியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வழக்கில் ஒரு சவரன் செயினை என மொத்தம் 5க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ராமு என்கிற ராம்குமார் (வயது 21) இந்த சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

  Also Read:  தடம் மாறிப்போன காதல் மனைவி.. திருப்பி அனுப்ப மறுத்த டீக்கடை மாஸ்டர் - ஆத்திரத்தில் கொலை செய்த கணவன்

  கொள்ளையன் ராமு கடந்த ஒரு வருடங்களாக தலைமறைவாக இருந்த வந்த நிலையில் தற்போது போலீஸார் அவனை கைது செய்துள்ளனர். கைதான ராமுவிடன் இருந்து திருடப்பட்ட அனைத்து பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஒரு வருட காலமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து பிடிபடாமல் இருந்த கொள்ளையனை கைது செய்த போலீசாருக்கு துணை ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

  செய்தியாளர்: அசோக் குமார்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: