மது குடிக்கலாம் என்று அழைத்துச் சென்ற நண்பரை கொலை செய்த சக நண்பர்கள் இருவர் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் மூலம் சரணடைந்தார்.
சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரி எழில்முகா நகர், ஜவஹர் நகர் செல்லும் பிரதான சாலையையொட்டி உள்ள முட்புதருக்குள் சக நண்பர் அருண் என்பவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக வழக்கறிஞர் ஒருவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இருவரை சரணடைய செய்தார். பின்னர் போலீசார் இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
Also Read: நண்பன் மனைவியுடன் பழக்கம்.. நிர்வாண வீடியோ.. மதுவிருந்து - இரட்டை கொலை சம்பவத்தின் பகீர் பின்னணி
விசாரணையில் கடந்த வெள்ளிகிழமை (11.03.2022) அன்று சென்னையில் வசித்து வரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண், அவர்களது நண்பர்களான சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த 40-வயதான சதீஷ், சென்னை கண்ணகிநகரை சேர்ந்த 39-வயதான விஜய்(எ)மணி ஆகிய மூவரும் ஓஎம்ஆர் சாலையை ஒட்டியுள்ள முட் பொதர் ஒன்றில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்பொழுது ஏற்பட்ட தகராறில் அருகில் கிடந்த கல்லை எடுத்து அருண் தலையில் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அருண் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. பயத்தில் அங்கிருந்து தப்பி சென்ற இருவரும் செய்வது அறியாமல் இருந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாகியும் அருண் கொலையான தகவல் செம்மஞ்சேரி போலீசாருக்கு தெரியவராததால் கொலை செய்த சதீஷ் மற்றும் விஜய்(எ)மணி இருவரும் வழக்கறிஞர் ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளனர்.
Also Read: திருமணமான பெண்ணுக்கு செல்போனில் தொல்லை.. தட்டிக்கேட்ட சித்தப்பாவை காரை ஏற்றி கொன்ற கொடூரம்
சதீஷ் மற்றும் விஜய்(எ) மணி இருவரும் அணுகிய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொலை சம்மதமாக இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினால் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கும் ஆய்வாளருக்கும் நீதிமன்றத்தில் அவப்பெயர் ஏற்படும் என்பதால் செம்மஞ்சேரி போலீசாரை காப்பாற்றும் எண்ணத்தில் இருவரையும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஆய்வாளர் சீனிவாசனிடம் வழக்கறிஞர் ஆஜர்படுத்தினார். பின்னர் கொலை சம்பவம் அரங்கேறிய பகுதிக்கு சென்று செம்மஞ்சேரி போலீசார் தலை நசுங்கி இறந்து கிடந்த அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அருண் தங்களது செல்போனை திருடியதாக எண்ணி திட்டம் தீட்டி அருணை மதுகுடிக்க அழைத்து சென்றதும், அங்கு அருணிடம் தகராறில் ஈடுபட்டபோது ஆத்திரத்தில் அருண் தலையில் கல்லை போட்டு விட்டு சென்று விட்டதாகவும், அடுத்த நாள் வந்து பார்த்த போது இறந்தது தெரியவந்ததால் சரணடைய சென்றதாக போலீசாரிடம் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : ப.வினோத்கண்ணன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Death, Murder case