அதிக கமிஷன் தருவதாக மோசடி- மூவர் கைது: மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளருக்கு வலை!

அதிக கமிஷன் தருவதாக மோசடி

பணத்தை எண்ணிவிட்டு வருவதாகக் கூறி கீழே சென்ற நவாஷ் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த ஆல்வின் ஞானதுரை நவாஷை தேடியபோது அவர் அங்கு இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்

  • Share this:
சென்னையில் அதிக கமிஷன் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி ரூ.90 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுச் செயலாளரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் ஞானதுரை(30). இவர் ICICI Direct.com என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்ய இயலாத சூழலில் உள்ள வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற்று வங்கியில் செலுத்தி அதற்கான ஆவணங்களை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து தனக்கான 1 சதவீத கமிஷனை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழில் செய்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் சுமார் 70 வாடிக்கையாளர்களிடம் பெற்ற 90 லட்சம் ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்த ஆல்வின் முனைந்தபோது, அவருக்கு அறிமுகமான ஐயப்பந்தாங்கலைச் சேர்ந்த பாதிரியார் பாலன்(41) மற்றும் இடைத்தரகரான வேலாயுதம்(55) ஆகிய இருவரும் வங்கியில் செலுத்தும் பணத்தை தங்களுக்குத் தெரிந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த நவாஷ் என்பவரிடம் கொடுத்தால் 5 சதவீத  கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: கைக்கொடுத்த யூடியூப்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி - முதல் திருட்டிலே போலீசிடம் சிக்கிய திருடர்கள்!

மேலும், நவாஷ் அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருவதால் அவ்விருவரும் கூறிய ஆசை வார்த்தையை நம்பி நேற்று மாலை ஆல்வின் ஞானதுரை 90 லட்சம் ரூபாய் பணத்துடன் தன்னுடன் பணிப்புரியும் ஊழியர்களோடு, நவாஷை ராயப்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து பணத்தை எண்ணிவிட்டு வருவதாகக் கூறி கீழே சென்ற நவாஷ் வெகுநேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த ஆல்வின் ஞானதுரை நவாஷை தேடியபோது அவர் அங்கு இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.



பின்னர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து ஆல்வின் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஐஸ் ஹவுஸ் போலீசார், ஆல்வின் ஞானதுரையிடம் புகாரைப் பெற்று 90 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான அனைத்து மக்கள் ஜனநயகக் கட்சி பொதுச்செயலாளரான நவாஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது மோசடி மற்றும் நம்பிக்கை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கு வழங்கும் இலவச பேருந்து டிக்கெட்... இப்படியும் ஒரு மோசடியா...!


இந்த நிலையில் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த அசன் காதர், பரங்கி மலையைச் சேர்ந்த பாலன், தூத்துக்குடியைச் சேர்ந்த வேலாயுதம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து  13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அனைத்து மக்கள் ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளரான நவாஷை ஐஸ்ஹவுஸ் போலீசார் தேடி வருகின்றனர்.
Published by:Murugesh M
First published: