Home /News /tamil-nadu /

இளைஞர்கள் மு.க.ஸ்டாலின் போல் உழைக்க வேண்டும்: ப.சிதம்பரம்

இளைஞர்கள் மு.க.ஸ்டாலின் போல் உழைக்க வேண்டும்: ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

பெண்களுக்காக பட்ஜெட்டில் பல விஷங்களை தமிழக அரசு செய்துள்ளதாக குறிப்பிட்ட ப.சிதம்பரம், அரசு பள்ளி மாணவிகள் இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டு உயர்கல்விக்கு மாதம் 1000 உதவித்தொகை புரட்சிக்கரமான அறிவிப்பு என பாராட்டுத் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்,  ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என கூறினார்.

சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மிண்ட் தங்க சாலையில் தமிழ்நாடு முதல்வரின் பிறந்த நாளையொட்டி  மனித நேயத்திரு நாள் கருத்தரங்கரம் நடைபெற்றது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,  சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ,  உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம்,  ஒரு மனிதனுக்கு பிறந்த நாள் ஆண்டுதோறும் வரும். அப்போது அவர் எதை பிரதிபலிக்கிறாரோ அதை பேசலாம். முதல்வர் எதற்கு அடையாளமா நிற்கிறார் என்பது முக்கியம். அந்த அடையாளம் சிறந்தது என்றால் அம்மனிதர் சிறந்தவர். பதவிக்கு வரும் முன்னர் என்ன சொன்னார் பதவிக்கு வந்த பின் என்ன செய்தார் என்பது முக்கியம்.

தேர்தலின் போது அவரின் சொல்லை வைத்து அவருக்கு வாக்களியுங்கள் என்றேன். இப்போது அவரின் செயலை வைத்து வாக்களியுங்கள் என்பேன். முதல்வர் எழுதிய நூலை  காரைக்குடியில் கேட்டேன் கிடக்கவில்லை. நல்லவேளையாக ஒரு சட்டமன்ற உறுப்பினர் வாயிலாக நூலை பெற்று படித்தேன்.

மேலும் படிங்க: இஸ்லாமியர்கள் கல்விக் கூடங்களுக்கு வெளியே ஹிஜாப் அணிந்துகொள்ளட்டும்- அண்ணாமலை


பள்ளி, கல்லூரி நேரத்தை தவிர  மற்ற நேரங்களில் முரசொலி அலுவலகத்தில் இருந்தேன் என்கிறார்.  முரசொலி அச்சானதும் அதனை பார்சல் செய்து ஆட்டோவில் வெளியூருக்கு அனுப்புவது உள்ளிட்டவற்றை செய்தார்.  முரசொலி செல்லவேண்டிய இடத்திற்கு சரியாக செல்கிறதா என கவனித்தார். இளைஞர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களை போல் உழைக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் பேசினார்.

மேலும், இன்று முதல்வர் நாற்காலியில் உள்ளார் அவர் பொறுப்பை எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பதை பார்க்கவேண்டும்.
கடமையை எவ்வாறு செய்துள்ளார் என்பதே முக்கியம்
மிக மிக பிடித்த அம்சம் ஏறத்தாழ 45ஆயிரம் கோடி ரூபாய் கல்விக்காக ஒதுக்கியுள்ளார்.  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு கல்வி தான் முக்கியம். உணவு மானியம், மின்சார மானியம், பெண்கள் இலவச பேருந்து பயணம் என தேவையான மானியங்களை கொடுத்தற்காக தமிழ்நாடு அரசிற்கு  ப.சிதம்பரம் நன்றி தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழக பட்ஜெட்டை இந்தியாவே பாராட்டுகிறது : உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்


பெண்களுக்காக பட்ஜெட்டில் பல விஷங்களை தமிழக அரசு செய்துள்ளதாக குறிப்பிட்ட ப.சிதம்பரம், அரசு பள்ளி மாணவிகள் இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டு உயர்கல்விக்கு மாதம் 1000 உதவித்தொகை புரட்சிக்கரமான அறிவிப்பு என பாராட்டுத் தெரிவித்தார்.

நியாமான பங்கினை எந்த மாநிலத்திற்கும் கொடுக்கவில்லை. ஒரே நாடு, ஒரே மொழி; ஒரே நாடு, ஒரே உணவு;  ஒரே நாடு, ஒரே ரேஷன்; ஒரே நாடு, ஒரே தேர்தல் போன்றவற்றால் மாநில அரசு அதிகாரத்தை இழக்கும் நிலை வரும். அதனால் தான் எதிர்க்கிறோம் என்று கூறிய சிதம்பரம்,  இன்றய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு
நிதி பற்றாக்குறை , கடன்வாங்குவது, வருவாய் பற்றாக்குறை என மூன்றையும் குறைத்து தைரியமாக துணிவாக எடுத்து வைத்த முதல்வரையும் நிதியமைச்சரையும் பாராட்டுகிறேன். இது ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்று குறிப்பிட்டார்.
Published by:Murugesh M
First published:

Tags: Congress, DMK, MK Stalin, P.chidambaram

அடுத்த செய்தி