பள்ளி தோழனுடன் சிறுமி கள்ளக்காதல்... கணவரை வெட்டி கொல்ல முயற்சி

மாதிரி படம்

கணவரை கொல்ல முயன்ற வசந்தகுமார் சிறுமியின் பழைய காதலர் என்பதும் இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது

  • Share this:
சென்னையில் கணவனை கொல்ல கள்ளக்காதலனுடன் சேர்ந்து முயற்சி செய்த 16 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வருபவர் தூத்துக்குடி மாவட்டம் கத்தாலம்பட்டி கிராமத்தை
சேர்ந்த கருப்பசாமி(30).  இவர் மணலி ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள உணவகத்தில் சப்ளையராக பணிபுரிந்து வந்துள்ளார்.

அதே உணவகத்தில் ஜோதியும் அவருடைய மகளும் ஒன்றாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த பழக்கத்தில் ஜோதி மகளான சிறுமியை கருப்பசாமிக்கு கடந்த ஆண்டு தூத்துக்குடியில் திருமணம் செய்து வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமணமான ஒரு மாதத்தில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் இருக்கும் தனது தாய் ஜோதி வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில்,  கருப்பசாமி மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக பெண்ணின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் வந்து கருப்பசாமியின் பின் தலையில் கத்தியால் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த கருப்புசாமி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க: யூ டியூப் முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: பப்ஜி மதன் மனைவி பேட்டி...


இந்த சம்பவம் தொடர்பாக  கருப்புசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த எண்ணூர் காவல்துறை வசந்தகுமாரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது,  கருப்பசாமியின் மனைவியான சிறுமியும்    வசந்தகுமாரும் தண்டையார்பேட்டையில் உள்ள பள்ளியில் பயிலும்போது பழக்கம் ஏற்பட்டு பிறகு இருவரும் காதலித்து 3 மாத காலமாக சேர்ந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

இதையும் படிங்க: பைக் வைத்திருப்பவர்கள் உஷார்.. கையில் கேனுடன் சுற்றும் பெட்ரோல் திருடர்கள்....


வசந்தகுமார் இந்த சிறுமியின் பழைய காதலர் என்பதும் இவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.  இதையடுத்து வசந்தகுமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்த போலீசார், சிறுமிக்கு 16 வயது என்பதால் அவரை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Published by:Murugesh M
First published: