TN Budget 2021: கோடம்பாக்கம்- பூந்தமல்லி மெட்ரோ சேவை: பட்ஜெட்டில் முக்கிய தகவல்!

மெட்ரோ

மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வழியாக விமான  நிலையத்தில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து முணையம் வரை நீட்டிக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணிகள் 2026ம் ஆண்டுக்குள் நிறைவுபெறும் என  தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் மெட்ரோ ரயில்  தொடர்பாக  அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர்,  சென்னை  மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும், மத்திய அரசு தெரிவித்தபடி,  சென்னை மெட்ரோ ரயில்  திட்டத்தின் 2ம் கட்டத்திற்கு பங்கு  மூலத்தனத்திற்கான விரைந்த முறையான ஒப்புதலை வழங்குமாறும் அதற்கு இணையான மத்திய அரசின் பங்கை விரைந்து வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    கோடம்பாக்கம்- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்றும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்தார்.  இதேபோல், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் அனைத்தும் 2026ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மெட்ரோ ரயில் திட்டத்தை தாம்பரம் வழியாக விமான  நிலையத்தில் இருந்து கிளம்பாக்கம் பேருந்து முணையம் வரை நீட்டிக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாகவும்  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published: