முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மனைவியின் அக்கா உட்பட பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன் சிறையிலடைப்பு

மனைவியின் அக்கா உட்பட பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன் சிறையிலடைப்பு

கைதான நபர்

கைதான நபர்

சென்னையில் அக்கம்பக்கத்தினரை ஆபாச வீடியோ எடுத்த கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

  • Last Updated :

வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் பகுதியில் வசித்து வருபவர்  பிரித்திகா( வயது 26)இவருடைய கணவரான சேகர்( வயது 30) தனியார் நிறுவனத்தில் ஊழியராகப ணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சேகர் ஒரே குடியிருப்பில் வசித்து வரும் அவரது மனைவியின் சகோதரியான லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார்.

இதை தெரிந்து கொண்ட லட்சுமி தனது சகோதரி பிரித்திகாவிடம் விவரத்தை கூறியுள்ளார். பிரித்திகா தனது கணவர் சேகரின் செல்போனை அவருக்கே தெரியாமல் ஆராய்ந்துள்ளார். அதில் தனது சகோதரியை ஆபாசமாக வீடியோ  எடுத்தது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாது

அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களின் சில முகம் சுளிக்கும் வீடியோக்களும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Also Read: மகளிடம் அத்துமீறிய கணவன்.. சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

உடனடியாக பிரித்திகா திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் ஷீலா மேரி  இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். நீதிமன்ற விசாரனைக்கு பின்   சேகரை சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாச வீடியோ எடுத்த கணவன் மீது தைரியமாக  புகார் கொடுத்த மனைவியை காவலர்கள் சிலர் வெகுவாக பாராட்டினர்.

செய்தியாளர்: அசோக் குமார்

First published:

Tags: Chennai, Crime | குற்றச் செய்திகள், Leak video, Police