ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.. போக்சோ சட்டத்தில் கைது

பெற்ற மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்.. போக்சோ சட்டத்தில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்

சிறுமியை ஏழுமலை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  செங்குன்றம் அருகே 16 வயது மகளை 8 மாத கர்ப்பமாக்கிய தந்தையை போலீஸார் கைது செய்தனர். 

  செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த  ஏழுமலை (வயது 38). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகள் 16 வயது சிறுமி அருகில்  உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாயார் கடந்த ஜூன் மாதம் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இவரது தங்கை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  16 வயதான தனது மகளை ஏழுமலை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தையில் இந்த கொடூர செயலை வெளியில் சொல்ல முடியாமல் சிறுமி தவித்து வந்துள்ளார்.

  Also Read : காதலுக்கு எதிர்ப்பு தூக்கில் தொங்கிய ப்ளஸ் டூ மாணவி.. காதலனும் தற்கொலை

  சிறுமியை ஏழுமலை மிரட்டி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். சிறுமி சமீபத்தில் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

  இதனையடுத்து மருத்துவர்கள்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் மகளிர் ஆய்வாளர் ஜெயலட்சுமி மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்ததில் தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் தந்தை என ஒப்புக்கொண்டார்.பின்னர் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர் ஏழுமலையை இன்று கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: கன்னியப்பன் 

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Pocso, POCSO case, Sexual abuse