Home /News /tamil-nadu /

தேர்தல் பிரச்னையில் திமுக வட்ட செயலாளர் கொலையா? - தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

தேர்தல் பிரச்னையில் திமுக வட்ட செயலாளர் கொலையா? - தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

வட்ட செயலாளர் செல்வம்

வட்ட செயலாளர் செல்வம்

DMK : திமுக வட்ட செயலாளரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஆளுங்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சென்னை மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை மடிப்பாக்கம் 188-வது தி.மு.க வட்ட செயலாளர் பதவியில் இருப்பவர் செல்வம் ( வயது 45). இவர் மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பில் 188-வது வட்ட  வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவற்கு திமுக சார்பில் மனு போட்டுள்ளார். இவருடைய அலுவலகம் ராஜாஜி நகரில் உள்ளது. இந்நிலையில்  நேற்று ராஜாஜி சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவரது அலுவலகம் உள்ள ராஜாஜி தெருவில் இருந்து சுமார் 10 மீட்டர் அருகில் உள்ள ராமச்சந்திரா தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

    இந்நிலயில் இரவு 9 மணிக்கு 3 இரு சக்கர வாகனத்தில் வந்த  4 பேர் முதல் 6 பேர் கொண்ட கும்பல்  செல்வத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த செல்வத்தை மீட்ட தி.மு.க நிர்வாகிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    Also Read: மனைவியின் ஆவி.. நள்ளிரவில் சுடுகாட்டில் கதறல் - இளைஞர் தற்கொலையால் கிராம மக்கள் அதிர்ச்சி

    சம்பவம் இடத்திற்கு வந்த மடிப்பாக்கம் போலீசார் தனியார் மருத்துவமனையில் இருந்த தி.மு.க வட்ட செயலாளர் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்... மோதிக்கொள்ளும் உடன்பிறப்புகள்.. தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மீது குப்பைத்தொட்டி வீச்சு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்னையா அல்லது ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து போலீஸார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். ஆளுங்கட்சியை சேர்ந்த வட்ட செயலாளரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: வினோத் கண்ணன்
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, Crime News, DMK, Local Body Election 2022, Murder, Tamilnadu

    அடுத்த செய்தி