Home /News /tamil-nadu /

வீடியோ கான்பிரன்சிங் விசாரணையில் சென்னை வக்கில் செக்ஸ் சேட்டை.. கடுப்பான நீதிபதிகள் - தொழிலுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

வீடியோ கான்பிரன்சிங் விசாரணையில் சென்னை வக்கில் செக்ஸ் சேட்டை.. கடுப்பான நீதிபதிகள் - தொழிலுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

Video Conferencing

Video Conferencing

கேமரா ஆனில் இருந்தது தெரியாமல் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    காணொளி காட்சி விசாரணையின்
    போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    கொரோனா தொற்று ஆரம்பித்த போது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் உள்ளது. சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பித்து கொண்டிருக்கையில், கேமரா ஆனில் இருந்தது தெரியாமல்
    நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வழக்கறிஞர் ஒருவர்
    பெண்ணுடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது சக வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

     Also Read: ஆண்டிப்பட்டி நர்சுடன் உல்லாசம்.. கொலை.. நகையுடன் எஸ்கேப்.. சிக்கிய கள்ளக்காதலன் தற்கொலை

    இந்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான
    வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு, சம்மந்தப்பட்ட
    வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

    Also Read:  பள்ளி மாணவிகளை வீடியோ எடுத்து டார்சர் செய்த இளைஞர் - கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டிய மாணவிகள்

    இது போன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்துள்ள நீதிபதிகள், சம்மந்தப்பட்ட காட்சிகளை சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டு சூமோட்டோ வழக்கின் விசாரணையை வரும் 23 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதித்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai High court, Controversial video, Crime | குற்றச் செய்திகள், Lawyers, Leak video

    அடுத்த செய்தி