கொசஸ்தலை ஆற்றின் வேகம் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு: அரசு உதவ கோரிக்கை!

முகத்துவாரம்

பல்வேறு கிராமங்களில் பாய்ந்து ஒடும் கோசஸ்தலை ஆற்றின் வெள்ளம் கடைசியாக கடலில் கலக்கும் இடம் தான் இந்த தாழங்குப்பம் பகுதி. சுமார் 100கிலோமீட்டர் வேகத்தில் எப்போதும் வெள்ளம் போல கடலை சென்றடைகிறது கோசஸ்தலை ஆறு

  • Share this:
கோஸஸ்தல ஆற்றின் முகத்துவாரம் பகுதியில் ஆற்றின் வேகம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னையில் மீனவர்கள் வசிக்கும்  பகுதிகள் ஏராளமாக உள்ளன. பகுதிகளுக்கு ஏற்ப மீனவர்கள் அனுபவிக்கும் இன்னல்களும் மாறுபடும்.  அதிலும் தாழங்குப்பம் மற்றும் நடுங்குப்பம் மீனவர்களின் சிக்கல் சொல்லில் அடங்கா துயரமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல்வேறு கிராமங்களில் பாய்ந்து ஒடும் கோசஸ்தலை ஆற்றின் வெள்ளம் கடைசியாக கடலில் கலக்கும் இடம் தான் இந்த தாழங்குப்பம் பகுதி. சுமார் 100கிலோமீட்டர் வேகத்தில் எப்போதும் வெள்ளம் போல கடலை சென்றடைகிறது கோசஸ்தலை ஆறு. எனவே ஆற்றின் வேகமும் கடலின் சீற்றமும் மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க டெரிஜிங் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க: தளர்வா? கடுமையா? - ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!அதாவது  முகப்பு துவாரத்தில் மணலை தூர்வாரி நீரோட்டத்தை சமன்படுத்தும் இந்த பிரமாண்ட இயந்திரம் கடந்த 8 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் நிற்கிறது. இதனால் தினம் தினம் உயிரை பணயம் வைத்து மீன்பிடி தொழிலை செய்து வருவதாக கூறுகின்றனர் மீனவர்கள்.

 

20 ஆண்டுகளுக்கு முன்பு டெரெஜிங் இயந்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருப்பதால் தங்களுக்கு நிரந்தர தீர்வாக தடுப்பணை அமைத்து மீனவர்கள் உயிர் இழப்பை தடுக்க வேண்டும் என மீனவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு!


இந்த பகுதியில் 700க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் சிறிய படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றன. கோசஸ்தலை ஆற்றின் வேகத்தால் ஆயிர கணக்கில் மீனவர்கள் உயிர் இழந்து உள்ளனர். எனவே தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டு பயமில்லாமல் மீன் பிடி தொழில் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 
Published by:Murugesh M
First published: