முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடந்த ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு இருந்தால் ரத்து செய்யப்படும்: அமைச்சர் அறிவிப்பு!

கடந்த ஆட்சியில் போடப்பட்ட டெண்டர்களில் முறைகேடு இருந்தால் ரத்து செய்யப்படும்: அமைச்சர் அறிவிப்பு!

கே.என்.நேரு

கே.என்.நேரு

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில், கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களில் தண்ணீரை சுத்தப்படுத்தி மழைநீரை சேமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அதிமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டிருந்த டெண்டர்களில் முறைகேடுகள் இருந்தால் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில், நகர்புற வளர்ச்சி துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கோயம்புத்தூர் ,சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாநகராட்சிகள் , நகராட்சிகள் , பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகிய துறைகளில் தற்போதைய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், கடந்த ஆட்சியில் துறை வாரியாக நடைபெற்ற தவறுகள் மற்றும் டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

மேலும் துறைவாரியாக புகார்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த ஆட்சிகாலத்தில் முறைகேடாக டெண்டர்கள் போடப்பட்டது கண்டறியப்பட்டால் ரத்து செய்யப்படும் எனவும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சிக்கன் பிரியாணி வாங்க சில்லறையோடு குவிந்த மதுரைக்காரங்க...திறந்த வேகத்தில் மூடப்பட்ட புதிய ஓட்டல்!

சென்னையில் மழைநீர் தேங்காத வகையில், கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்களில் தண்ணீரை சுத்தப்படுத்தி மழைநீரை சேமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர்,சென்னையில் 330 கழிவுநீர் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அதனை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும், பல்வேறு வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்காத அளவில் பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: இனி வேலை தேடி சென்னை போக வேண்டாம்- தென் மாவட்டங்களிலேயே ஐ.டி. பூங்காக்கள்: அமைச்சர் தகவல்!

நகராட்சி தேர்தலை பொருத்தவரை மாநகராட்சியில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், பட்டியல் தயார் செய்யப்பட்ட பின் தேர்தல் தேதியை முதல்வர் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிசி சான்றிதழ்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு!

சிங்கார சென்னை 2.0 திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கிய திட்டம் என்றும், சிங்கார சென்னை தொடர்பாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பார் என்றும், முதல்வர் கூறும் அனைத்து திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

First published:

Tags: DMK, K.N.Nehru, Tender