ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விபத்து.. 24 வீடுகள் தரைமட்டம்

சென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விபத்து.. 24 வீடுகள் தரைமட்டம்

சென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விபத்து.. 24 வீடுகள் தரைமட்டம்

சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்த விபத்தில் 24 வீடுகள் தரைமட்டமானது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத் தெருவில் அரிவாக்குளம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் நேற்றிரவு விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் பெரியளவில் உருவானதால் இன்று காலையிலிருந்தே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்ட‌டம் இன்று காலை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் 24 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியிருப்பில் உள்ள 24 வீடுகளில் உள்ளவர்களும் வெளியேற்றப்பட்டனர். காலையில் கட்டடத்தில் அதிர்வு இருந்ததால் மக்கள் வெளியேறிய உள்ளனர். இதன்காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது கட்டட இடிபாடிகளில் யாராவது சிக்கியுள்ளனரா என தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

First published:

Tags: Chennai, Houses Built project