தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க உத்தரவிடக்கோரி,
சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை
பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இதன் மீதான விசாரணையின்போது, தக்காளி விற்பனை செய்யப்படும் இடத்திற்கு அருகில் உள்ள ஏ சாலை, எஃப் பிளாக் பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என மார்க்கெட் தரப்பு வாதிட்டது.
ஆனால், தக்காளியை லாரியிலிருந்து சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே காலி மைதானத்தை பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்ய மாட்டோம் என்றும் வியாபாரிகள் சங்கம் தரப்பு உத்தரவாதம் அளித்தது. வாகன நிறுத்துமிடத்தை ஒதுக்கிக் கொடுத்தால், தக்காளி விலையைக் குறைப்போம் என்றும் வியாபாரிகள் சங்கம் உறுதியளித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தக்காளி ஏற்றி வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக தற்காலிகமாக ஒரு ஏக்கர் நிலத்தை 4 வாரங்களுக்கு ஒதுக்க உத்தரவிட்டார். இதிலிருக்கும் சாதக, பாதகங்களை இரு தரப்பும் இரண்டு வாரங்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறிய நீதிபதி சுரேஷ்குமார், உயர்ந்துள்ள தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையிலேயே இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இன்று கூடுதலாக 10 லோடு வாகனம் மூலம் மொத்தம் 50 வாகனத்தில் 705 டன் தக்காளி வந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையில் மாற்றம் இல்லாமல் இன்றும் அதே விலையாக 70 முதல் 75 ரூபாய்க்கு 1 கிலோ தக்காளி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
Must Read : தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல்
நேற்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு 653 டன் தக்காளி வந்த நிலையில் இன்று 705 டன் தக்காளி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.