ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை- போக்குவரத்து நெரிசலில் திணறும் மக்கள்

சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை- போக்குவரத்து நெரிசலில் திணறும் மக்கள்

சென்னை போக்குவரத்து நெரிசல்

சென்னை போக்குவரத்து நெரிசல்

Chennai rains | சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்துவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் 3 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக அடுத்த மூன்று நாட்களில் தமிழகத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

சென்னை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சென்னையில் பெய்து வரும் கனமழையினால் வடபழனி, கோயம்போடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி உள்ளது. இதனிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்ப்ட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : மழை நீரில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு

குறிப்பாக அண்ணாசாலை, பூந்தமல்லி ஹை ரோட்டில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. அதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கனமழையின் காரணமாக பல இடங்களில் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. எனவே, பொதுமக்களுக்கு உதவும் வகையில் மெட்ரோ ரயில் 12 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai rains