Home /News /tamil-nadu /

சென்னையில் பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்.. வைரலாகும் வீடியோ

சென்னையில் பேருந்தின் மேற்கூரையில் ஏறி மாணவர்கள் அட்டகாசம்.. வைரலாகும் வீடியோ

பள்ளி மாணவர்கள் அட்டகாசம்

பள்ளி மாணவர்கள் அட்டகாசம்

பள்ளி மாணவர்கள் பஸ்ஸின் மேற்கூரையில் மீது அமர்ந்து கோஷம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

     

    பூந்தமல்லியில் அரசுப்பள்ளி மாணவர்கள் மாநகர பேருந்து மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. 

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அரசு பஸ்களில் பயணிகள் இடைவெளி விட்டு பயணம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்களை கண்காணிக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பேருந்தின் மேற்கூரையில் ஏறி பள்ளி மாணவர்கள் கோஷம் போடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சைதாப்பேட்டையில் இருந்து வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் கல்லறை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்ஸின் மேற்கூரையில் மீது ஏறி அமர்ந்து கொண்டு கூறி கோஷமிட்டது தெரியவந்தது.

    இதனை அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளி மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் படியில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்திய நிலையில் பூந்தமல்லி அரசு பள்ளி மாணவர்கள் பஸ்ஸின் மேற்கூரையில் மீது அமர்ந்து கோஷம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : சோமசுந்தரம் 
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Chennai, School students, Viral Video

    அடுத்த செய்தி