சென்னை மதுரவாயல் அருகே லாரி திருடிய வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.
சென்னை மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாளையம்(54), இவர் சொந்தமாக மணல் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு பணியை முடித்து விட்டு தனது லாரியை தனது வீட்டின் ஓரமாக நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பின்பு மறு நாள் காலை வந்து பார்த்த போது தனது லாரி காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையில் தனிப்படை அமைத்து போரூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு சுங்கச்சாவடி ஆகிய 150-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பரமக்குடி, ராம்நாட்டில் தலைமறைவாக இருந்த எண்ணூரை சேர்ந்த மோகன் (என்ற )குட்டி மோகன் (33), அம்பத்தூரை சேர்ந்த பொன்முருகன்(50), சிலம்பரசன்(32), ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து விசாரணை செய்தபோது எண்ணூரை சேர்ந்த பிரபல ரவுடி தனசேகருக்கு எதிராக மோகன் செயல்பட்டு வந்ததாகவும் எனவே இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்த நிலையில் எண்ணூர் தனசேகரன் தீர்த்து கட்ட பணம் தேவை என்பதால் லாரியை கடத்தியது விசாரணையில் தெரியவந்ததும் கடத்திச் சென்ற லாரியை விற்கும் நேரத்தில் மூன்று பேரும் பிடிபட்டனர். மோகன் மீது வெடிகுண்டு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. லாரி திருடி சென்றதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் மதுரவாயல் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர்: சோமசுந்தரம்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.