• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் ரூ.300 கோடி வரிஏய்ப்பு செய்த நிதிநிறுவனங்கள்- வருமானவரி சோதனையில் கண்டுபிடிப்பு

சென்னையில் ரூ.300 கோடி வரிஏய்ப்பு செய்த நிதிநிறுவனங்கள்- வருமானவரி சோதனையில் கண்டுபிடிப்பு

Youtube Video

சென்னையில் இரண்டு தனியார் நிதிநிறுவனங்களில் நடந்த வருமானவரித்துறை சோதனையில் 300 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சில நிதி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட வரையறையைத் தாண்டி, வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக வட்டி பெறுவதாக சென்னையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் மீது வருமானவரித்துறைக்கு அதிக அளவில் புகார்கள் வந்தன.

    புகாரின் அடிப்படையில் நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக சோதனையினர் ஈடுபட்டனர். அந்நிறுவனங்கள் வரையறையைத் தாண்டி அதிக வட்டி வசூலித்தது வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் உறுதி செய்யப்பட்டது.

    வட்டி பணத்தின் மூலம் கணக்கில் வராத 300 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் நிதி நிறுவனத்தின் பெயரில் இல்லாமல் வெவ்வேறு பெயர்களில் கணக்குகளை தொடங்கி, 300 கோடி ரூபாயை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்று வந்ததும் தெரியவந்தது.

    இச்சோதனையில் 9 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: