• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆட்டோ ஓட்டி திருந்தி வாழ்ந்து வந்த முன்னாள் ரவுடி - கொடூரமாக வெட்டிக் கொலை

ஆட்டோ ஓட்டி திருந்தி வாழ்ந்து வந்த முன்னாள் ரவுடி - கொடூரமாக வெட்டிக் கொலை

Youtube Video

திருந்தி வாழ நினைத்த பிரபல ரவுடி ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சென்னை எண்ணூரில் திருந்தி வாழ்ந்து வந்த முன்னாள் ரவுடியை 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

    எண்ணூர் நேதாஜி நகர் 1வது தெருவில் வசித்து வந்தவர் பிரபல ரவுடி ஆறுமுகம். இவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    தற்போது குற்றச் சம்பவங்களில் எதிலும் ஈடுபடாமல் ஆட்டோ ஒட்டி வந்தார் ஆறுமுகம். இந்நிலையில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் குடிபோதையில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் சிமெண்ட் ஷீட்டால் ஆன கூரையை சத்தமில்லாமல் உடைத்து வீட்டினுள் இறங்கியுள்ளனர்.

    தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகத்தை சுற்றி வளைத்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியது.சடலம் மீட்கப்பட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

    போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் அதே பகுதியைச் சேர்நத் கிளின்டன், ஜெயக்குமார், தசப்பன், வினோத்குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று உள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருந்தி வாழ நினைத்த பிரபல ரவுடி ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: