சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கடுமையான மூடு பனி காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக மின்சார ரயில்கள் தினசரி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இன்று முதல் வழக்கம் போல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை முதலே கடுமையான மூடு பனி காணப்படுகிறது. மூடு பனி காரணமாக சாலையில் செல்வதே மிகவும் சிரமமாக உள்ளது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றன.
மூடு பனி காரணமாக தற்போது ரயில்கள் தாமதமாக வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்க்கொண்டுள்ளானர். சென்னை புறநகரில் இருந்து சென்னைக்கு குறிப்பாக அம்பத்தூர் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு அன்றாட அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் கடும் அவதிக்கு ஆளாவார்கள். மூடு பனி காரணமாக திருத்தணி திருவள்ளூர் மார்க்கமாக சென்ட்ரல் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.
செய்தியாளர்: கன்னியப்பன்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.