ஆதரவற்ற நாய்களுக்கு பார்வோவைரஸ் தடுப்பூசி: சென்னை டிஸ்பென்சரி

ஆதரவற்ற விலங்குகளை, பல ஆண்டுகளாக டிஸ்பன்சரி பராமரித்து வருகின்றது.

ஆதரவற்ற விலங்குகளை, பல ஆண்டுகளாக டிஸ்பன்சரி பராமரித்து வருகின்றது.

  • Share this:
நாம் எந்த அளவுக்கு நாய்களை செல்லப்பிராணியாக நேசிக்கிறோமோ, அதே அளவுக்கு தெருவில் ஆதரவற்று திரியும் நாய்களை வெறுக்கிறோம். அவ்வபோது மீதமாகும் உணவுகள் அல்லது பிஸ்கட்கள் கொடுப்பதைத் தவிர்த்து வேறு எதையும் பெரிதாக செய்து விட முடியாது. ஆனால், சிலர், தெருவில் இருக்கும் நாய்களை தங்களால் முடிந்த வரை பராமரிக்க முன்வருகிறார்கள்.

பெசன்ட் மெமோரியல் விலங்கு மருந்தகத்தில் தற்போது 250 விலங்குகள், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விலங்குகளை, 7 கால்நடை மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளித்து பராமரிக்கின்றனர். அவை குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை, கட்டிகளை அகற்றுதல், அடிபட்டு, காயம் ஆறாமல் இருக்கும் கால்களை அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நீக்குவது ஆகியவற்றைக் கையாளுகின்றன.

இந்த டிஸ்பன்சரி ஆதரவற்ற விலங்குகளை, பல ஆண்டுகளாக பராமரித்து வருகின்றது. தற்போது, பார்வோ வைரஸ் தொற்று கால்நடைகளை பாதித்து வரும் நிலையில், இந்த பராமரிப்பாலர்களே, தொற்று பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி போட முன்வந்துள்ளனர். இந்த பார்வோ வைரஸ் மிகவும் ஆபத்தானது. தொற்று பாதிக்கப்பட்ட நாயிடம் ஏற்படும் நேரடியான தொடர்பு வழியாக அல்லது பாதிக்கப்பட்ட பொருள் மூலம் ஏற்படும் மறைமுகமான தொடர்பு வழியாகவோ இந்த வைரஸ் பாதிப்பு பரவுகிறது. தொற்று பாதிப்பு கொண்ட கழிவுகளை முகர்ந்து பார்ப்பது, நக்குவது வழியே நாய்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படலாம்.

தொற்று பாதிப்பில்லாத நாய், வைரஸ் தொற்றால் பாதிப்படைந்த விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் போது, வைரஸ் பாதிப்பு எளிதாக பரவுகிறது. இந்த வைரஸ், வயிறு, சிறுகுடல், பகுதிகள் மற்றும் அதன் செல்களை பாதிக்கிறது. உணவு உறிஞ்சும் தன்மையை குறைத்து, செரிமானத்தை பாதிக்கிறது. இந்த நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி போலவே, சிகிச்சைகளும் உள்ளன. ஆனால், தடுப்பூசி செலுத்தப்படாமல் இருப்பது அல்லது சிகிச்சை அளிக்கப்படும் நிலைக்கு பாதிப்பு ஏற்படுவது, இறப்பை ஏற்படுத்தலாம்.

இந்த டிஸ்பென்சரியின் மூத்த கால்நடை மருத்துவரான ஆர். சூரஜ் மோகன், “மழையும் வைரஸ் பரவுவதற்கான முக்கிய காரணி. ஒரு நாய்க்குட்டிக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் போது, ​​ தொடர்பு மூலம் தொற்று பரவுகிறது. மழை காரணமாக, ஒரு குறிப்பிட்ட பகுதியில், உள்ள அனைத்து நாய்க்குட்டிகளுக்கும் தொற்று பரவியுள்ளது. ஜூன் மாத இறுதியில் தொற்று பாதிப்படைந்த நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் சுமார் 25 தொற்று பாதித்த நாய்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம்" என்று அவர் கூறியதாக TNIE குறிப்பிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த டிஸ்பென்சரி, பார்வோ வைரஸ் தடுப்பூசிகள் தவிர்த்து, காயம், டிக் ஃபீவர், மற்றும் நாய், பூனை, கழுதை, குதிரை, மாடு, எருது உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு அறுவை சிகிச்சைகளும் செய்து வருகின்றது. தடுப்பூசிகளால் குணப்படுத்த முடியாத நாய்களுக்கு, திரவங்கள் மற்றும் மருந்துகள் மூலம், அவர்கள் பாதிப்பை கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாய்க்குட்டி பிறந்து 45 நாட்கள் ஆன பின்னே, தடுப்பூசியை செலுத்தலாம். இது தொற்று பாதிப்பை தடுக்கும் ஆன்டிபாடிகளை உருவாக்கும். இந்த சிகிச்சைகள், பெரும்பாலும் இலவசமாக மற்றும் சில நேரங்களில் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகின்றன.
Published by:Archana R
First published: