சென்னை மாநகராட்சி சோசியல் மீடியாவை நிர்வகிக்க இத்தனை கோடியா? சர்ச்சையால் டெண்டர் ரத்து

கோப்புப் படம்

சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கத்தை கையாள்வதற்காக அதிக தொகைக்கு டெண்டர் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

 • Share this:
  சென்னை மாநகராட்சியின் சேவைகள், சிறப்பு திட்டங்கள், மக்களுக்கான தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு வீடியோக்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்வது, மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்களை கையாள்வது போன்ற பணிகளுக்காக ஆண்டுக்கு 2 கோடியே 31 லட்சம் ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

  இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் கே.எஸ் சொல்யூசன் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் படிக்க... முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குவிந்த புகார்கள்...

  இதில், முறைகேடு நடந்திருப்பதாகவும், டெண்டர் எடுத்த கே.எஸ் சொல்யூசன் நிறுவனம் மற்றொரு சிறு நிறுவனத்திற்கு மிகக் குறைந்த தொகைக்கு உள் டெண்டர் கொடுத்து பணிகளை மேற்கொண்டதாகவும் புகார் எழுந்தது.

  இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த், ஒப்பந்ததாரர் எடுத்துக் கொண்ட பணியினை செய்ய முன்வராததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

  குறைந்த செலவில் மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை கையாள மாற்று நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
  Published by:Vaijayanthi S
  First published: