சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றினால் 25ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேறுவதற்காக 2071 கி.மீ நீளமுள்ள 8835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்காமல் வெளியேற ஏதுவாக அவ்வப்போது வடிகால்கள் தூர்வாரப்படுகின்றன.
இந்நிலையில், சில இடங்களில் மழைநீர் வடிகால்கள் வழியாக சில குடியிருப்புகளும், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளும் கழிவுநீரை வெளியேற்றுவதாக புகார்கள் உள்ளன. இதன் காரணமாக வடிகால்கள் அடைப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால்கள் வழியாக கழிவுநீரை வெளியேற்றக் கூடாது என அறிவித்தது. இதனை மீறி கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாயும், நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also read... அரசுப்பள்ளி ஆசிரியரை வகுப்பறையில் வைத்து மிரட்டும் மாணவர்கள் - வீடியோ காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி
மேலும், ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இது தொடர்பான புகார்களில் 105 கழிவுநீர் இணைப்புகள் கண்டறியப்பட்டு துண்டிக்கப்பட்டதோடு சுமார் 75 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுபோன்று மழைநீர் வடிகால்கள் வழியாக யாரேனும் கழிவுநீரை வெளியேற்றினால் 1913 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.