சென்னை மாநகராட்சி சார்பில் 400 முகாம்- ஒரே நாளில் 1.25 லட்சம் கொரோனா தடுப்பூசி

கோப்புப் படம்

சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் இன்று ஒரே நாளில் சென்னையில் வசிக்கும் 1,25,147 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மற்றும் காச நோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

  அதனடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 25,94,016 பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 11,22,132 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என மொத்தமாக 37,16,148 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி என்கிற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, வார்டிற்கு 2 தடுப்பூசி முகாம்கள் என மொத்தம் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட்டது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த 400 சிறப்பு முகாம்களில் மாநகராட்சி மண்டல அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து இன்று ஒரே நாளில் சென்னை மாநகரில் வசிக்கும் 1,25,147 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையானது சென்னை மாநகராட்சி சார்பில் நாளொன்றுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கைகளில் இது தான் அதிகபட்சமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Karthick S
  First published: