கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் சென்னை மாநகராட்சி!

எதிர்காலத்தில் மூன்றாவது அலை உருவாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

எதிர்காலத்தில் மூன்றாவது அலை உருவாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

  • Share this:
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வராமல் இருக்க எடுக்கப்பட வேண்டிய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராய சிறப்பு பணிக்குழுவை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையால் நாட்டில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு பக்கம் வேலையிழப்பு, ஒரு பக்கம் உயிரிழப்பு என மக்களை உருக்குலைய வைத்தது கொரோனா. தற்போது இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துவரும் சூழல் காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக பல மடங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து 18 ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதேபோல், சென்னையில் 7 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த தினசரி கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து 1,500க்கும் கீழ் பதிவாகி வருகிறது.  மூன்றாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, எதிர்காலத்தில் மூன்றாவது அலை உருவாகும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன் ஒரு பகுதியாக மூன்றாவது அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து அதனை வரவிடாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆராய பல்துறை வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு பணிக்குழுவை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள், தொற்று நோய் குறித்த ஆராய்ச்சியாளர்கள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் அந்த சிறப்பு பணிக்குழுவில் இடம்பெற உள்ளனர். இதற்கான அறிவிப்பை ஓரிரு தினங்களில் சென்னை மாநகராட்சி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published by:Archana R
First published: