Home /News /tamil-nadu /

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த விஜிபி மரைன் கிங்டம்- சீல் வைத்து ரூ.15,000 அபராதம் விதித்த அதிகாரிகள்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த விஜிபி மரைன் கிங்டம்- சீல் வைத்து ரூ.15,000 அபராதம் விதித்த அதிகாரிகள்

விஜிபி

விஜிபி

VGP | சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த விஜிபி பார்க்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    விஜிபி மரைன் கிங்டம் அனுமதியில்லாமல் இயங்கி வந்ததால் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு அதிகமாகிக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக மக்கள் அதிகம் கூடும் (சுற்றுலா தளங்கள்) இடங்களை திறக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா விஜிபி-க்கு சொந்தமான விஜிபி மரைன் கிங்டம் கொரோனா தளர்வுகளை மீறி திறந்து மக்கள் பார்வைக்கு வைத்திருந்ததாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

    தகவல் அறிந்த சோழிங்கநல்லூரில் உள்ள சென்னை மாநகராட்சி 15வது மண்டல அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தமிழக அரசின் உத்தரவை மீறி சுற்றுலா தளம் திறந்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து, விஜிபி மரைன் கிங்டமை மூடிய அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். அதை தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவை மீறி திறந்து வைத்திருந்ததால் ரூபாய் 15,000 ஆபராதம் விதித்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: CoronaVirus

    அடுத்த செய்தி