• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது; மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: ககன்தீப் சிங் பேடி

கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது; மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: ககன்தீப் சிங் பேடி

கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது; மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: ககன்தீப் சிங் பேடி

கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது; மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: ககன்தீப் சிங் பேடி

10, 11 ஆகிய தேதிகளில் பெய்யவுள்ள கனமழை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளதாகவும், மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைவெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் நேற்று கனமழை பெய்ததில் 50-60 சதவீதம் மழை நீர் நேற்றே வடிந்து விட்டது என்றும், 317 பகுதிகளில் நேற்று நீர் தேங்கியிருந்த நிலையில் 140 இடங்களில் முழுமையாக தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டதாகவும் , 177 இடங்களில் மட்டும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் கூறினார்.

    கொரட்டூர், மாம்பலம் பகுதியில் நேற்று இருந்ததை காட்டிலும் நீரின் அளவு குறைந்துள்ளதாகவும், நாளை காலை பல இடங்களில் நீர் முழுமையாக அகற்றப்படும் என்றார்.

    அதேபோல் இன்று ஒரே நாளில் மாநகராட்சி மூலம் மொத்தம் 7 லட்சத்துக்கு 16 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆணையர், மாநகராட்சி சார்பில் 58 இடங்களில் தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

    அதுமட்டுமின்றி மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதையில் 2 தவிர மற்ற இடங்களில் நீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறிய ஆணையர், 10, 11 தேதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது என்றும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

    மாநகராட்சி சார்பில் மின் மோட்டர், ஜேசிபி வாங்க 4 கோடி ரூபாய் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 41 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன என்றார். அதுமட்டுமின்றி 1913 எண்ணில் 30 நபர்கள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், தி.நகர் பகுதியில் விரைவாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார் என்று கூறிய ஆணையர்,

    மழை நேரத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சென்னையில் 3400 நபர்கள் மலேரியா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ளதாகவும், கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

    கன மழையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாள்தோறும் முறையாக நடைபெற்று வருவதாகவும், சென்னையில் 50 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை, அவர்கள் செலுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: