முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல்-திமுக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையில் புகார்

மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல்-திமுக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையில் புகார்

கேபி சங்கர்

கேபி சங்கர்

மாநகராட்சி உதவி பொறியாளரை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் எம்.எல்.ஏ. சங்கரின் கட்சித் பதவியை திமுக தலைமை பறித்த நிலையில், தாக்குதல் தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :

மாநகராட்சி உதவி பொறியாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறை ஆணையரிடம் சென்னை மாநகராட்சி புகார் அளித்தது.

சென்னை திருவொற்றியூர் நடராஜன் கார்டன் பகுதியில் உள்ள 3 தெருக்களில் கடந்த 27-ம்தேதி அதிகாலையில் சாலை போடும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு தனது ஆதரவாளர்களுடன் திருவொற்றியூர் தொகுதி எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் வந்து  மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலை பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தை நடத்திய மாநகராட்சி உதவி பொறியாளரை எம்எல்ஏ சங்கர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னை திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 3 தெருக்களில் மட்டும் ரூ. 30 லட்சம் செலவில் பணி நடந்து வருகிறது. இதற்காக 13 லாரிகளில் சாலைகளில் கொட்டுவதற்காக ஜல்லி கலவை கொண்டு வரப்பட்டது. இதனை எம்எல்ஏ சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்களும் திருப்பி அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் கிளம்பி உள்ளது. இதையடுத்து திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கட்சி கட்டுப்பாட்டை மீறி வருவதால், திருவொற்றியூர் மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று திமுக தலைமை அறிவித்தது.

இதையும் படிங்க: பாழடைந்து போன வேலுநாச்சியர், மருது சகோதரர்களின் போர் பயிற்சிக்கூடம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து துறைரீதியிலான விசாரணை நடத்தினர். தாக்கப்பட்ட மாநகராட்சி உதவி பொறியாளர், அவரது உதவியாளர் ஆகியோரிடம் துறைரீதியிலான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவொற்றியூர் எம்எல்ஏ சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்ககோரி  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் மூலமாக புகார் கொடுத்துள்ளார்.

மேலும் படிங்க: மக்கள் கோரிக்கைவைத்தால் சாலையோரங்களில் அரசு சார்பில் ஹோட்டல்கள் -அமைச்சர் ராஜகண்ணப்பன்

அடுத்தக்கட்டமாக இந்த புகார் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர். தாக்குதலுக்குள்ளான மாநகராட்சி உதவி பொறியாளர் மற்றும் சம்பவம் நடைபெற்ற போது யாரெல்லாம் அங்கு இருந்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்களிடம் தனித்தனியாக திருவொற்றியூர் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Chennai corporation, DMK